உலகம்

எமிரேட்ஸின் ஆலோசகர் சிறுவர் பாலியல் படங்களுக்காக கைது

ஜோர்ஜ் நாதிர் …. லெபனானிய கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர். அமெரிக்க பிரஜை.

1997 ஆம் ஆண்டு செக் குடியரசிலிருந்து ஒரு 14 வயது சிறுவனை பாலியல் நோக்கங்களுக்காக  ஐக்கிய அமெரிக்காவுக்கு  கூட்டிச் சென்றார்.

2000 ஆம் ஆண்டு அந்த சிறுவன் இவ்விடயத்தை செக் குடியரசு அரச அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தினான்.  மேலும் தான் வாஷிங்கடனில்  ஜோர்ஜ் நாதிரின்  வீட்டிலேயே இருந்ததாகவும் கூறினான்.

அதனை அமெரிக்காவும் சென்ற வருடம் 2018 இல் உறுதி செய்தது .

ஜோர்ஜ் நாதிர்  தொண்ணூறுகளில்  சிறுவர்களுக்கு  பாலியல் ஆபாச வெளியீடுகளை விநியோகித்தமைக்காக  செக் குடியரசு   நீதிம்னறத்தில்  குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு பின்னர் 2003 இல்  10 சிறுவர்களுக்கு பாலியல் பலாத்காரம் புரிந்தமைக்காக  சிறையிலும் அடைக்கப்பட்டார்.

இந்த  ஜோர்ஜ் நாதிர் எமிரேட்ஸ் முஹம்மத் பின் சாயத்தின் முதன்மை ஆலோசகர் என்பதும்  குறிப்பிடத்தக்கது .

இப்பொழுது அமெரிக்க  ரொபேர்ட் முல்லரது ரஷ்ய தலையீடு குறித்த விசாரணை வழக்கின் முக்கிய சாட்சியான ஜோர்ஜ் நாதிருக்கு  சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் அமெரிக்காவில் நீதிபதி சிறைத்தணடனை விதித்துள்ளார்.  அவரது அலைபேசியில் ஏராளமான சிறுவர் போர்னோ கிராபி படங்கள் காணப்பட்டுள்ளன. இரண்டு வயது முதல் 14 வயது வரையான சிறுவர்களது காட்சிகளே அதில்  இருந்துள்ளன.  அத்துடன் முஹம்மத் பின் சாயத் மற்றும் முஹம்மத் பின் சல்மானின்  அலைபேசி இலக்கங்களும் இருந்துள்ளன.

கடந்த 3 ஆம் திகதி எமிரேட்ஸிலிருந்து வாஷிங்டன் செல்லும் வேளை  நிவ்யோர்க் ஜோன்கென்னடி விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

2001 ஆம் ஆண்டு டல்லாஸ் விமான நிலையத்தில் வைத்தும் இதே குற்றத்துக்காக கைதாகி ஒரு வருட சிறைத்தண்டனையை இவர் அனுபவித்துள்ளார்.

Judge Orders Mueller Witness to Jail in Child-Pornography Case

 

Please follow and like us: