இலங்கை

இன்னுமொரு இனவாத தாக்குதலுக்கு தூபமிடும் மவ்பிம பத்திரிகை

 

வைத்தியர் ஷாபி தொடர்பாக  ஏற்கனவே  அடிப்படையற்ற செய்திகளை சிங்கள இனவாத பத்திரிகையான திவயின பிரசுரித்தமை யும்  அதைத்தொடர்ந்து  அவர் கைது செய்யப்பட்டு  அநியாயமான முறையில் சட்டத்துக்கு முரணாக  சிறைவாசம் அனுபவிப்பதும் அனைவரும் அறிந்த விடயம்.

இப்பொழுது மவ்பிம பத்திரிக்கை அதே பாணியில் வைத்தியர் ஷாபி மீது அர்த்தமற்ற அதே நேரம் பகுத்தறிவுக்கு பொருந்தாத வட்டிலப்பம் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

இனவாத தாண்டவமாடும் இந்த ஊடகங்களுக்கு  சட்டத்தின் வழியில் கடிவாளமிடுவது எப்போது என்று அரசாங்கத்தை  நோக்கி நீள்கிறது நியாயம்  தேடும் மக்களின் சுட்டுவிரல்.

Please follow and like us: