மஞ்சள் அங்கி இயக்கத்தின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் 30 வது வாரமாக நடைபெறுகிறது.
பிரான்சிய பாதுகாப்பு தரப்பின் கடுமையான அடக்குமுறைக்குள்ளாலும் இந்த போராட்டம் தொடர்கிறது.
தலைநகர் பாரிசில் பிரான்சிய பொலிஸாரின் மிளகாய் வாயுத் தாக்குதலுக்கு எதிர்வினையாக பல ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசார் மேல் கண்ணாடி போத்தல்களை வீசியெறிவதை காண முடிகிறது.
முக்கிய இடங்கள் பலவற்றில் ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்வதை போலீசார் தடுத்துள்ளனர்.
பிரான்சிய உள்துறை அமைச்சின் கணிப்பீட்டின்படி 10 ஆயிரத்து 300 பேர் தான் ஆர்ப்பாட்டத்தில் நாடு முழுவதும் ஈடுபடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயினும் மஞ்சள் ஆடை இயக்கத்தினரின் கணிப்பின்படி 19 ஆயிரத்து 654 பேர் வரை ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றுவதாக கூறப்படுகிறது.
எதிர்ப்பு பேரணி ஆரம்பித்தது முதல் 11 பேர் மரணமாகியுள்ளதாகவும் 4245 பேர் காயப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகிறது. அதில் 1797 பொலிஸாரும் அடங்குகின்றனர்.
மேலும் 12 ஆயிரத்து 107 பேர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.