உலகம்

உம்ராவை தவிர்ந்து தாயகம் திரும்பிய கட்டார் பிரதமர்

அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் பின் நாசர் அல்தானி , கட்டார் பிரதம மந்திரி.. உள்துறை அமைச்சரும் கூட.

கடந்த 14 வது இஸ்லாமிய உச்சிமாநாடு மக்காவில் நடந்த போது தவிர்க்க முடியாமல் சவூதி கட்டார் அமீருக்கும் அதில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தது.

முற்றுகை நிலையில் அந்த அழைப்புக்கு பதிலளிக்காமல் தனது நாட்டின் உயர் தர தூதுக்குழுவை உம்மத்தின் நலன் கருதி அனுப்பி வைத்தார் கட்டார் அமீர்.

அத்தூது குழுவுக்கு பிரதமர் தலைமை தாங்கினார்.

மக்காவில் இருக்கும் போது  புனித கஃபாவை காணும் வகையில் அவரது தங்குமறை  அமைந்திருந்தது. இருவருடங்களாக  புனித கடமைகளை செய்ய தடுக்கப்பட்டிருக்கும் தனதும் தனது மக்களதும் நிலை அவருக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது.

தனது மக்கள் தடுக்கப் பட்டநிலையில்  தான் மாத்திரம் உம்ரா கடமையை செய்ய அவர் மனம் இடம் தரவில்லை.

உம்ரா செய்யாமலே தாயகம் திரும்பினார் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் பின் நாசர் அல்தானி.

 

Please follow and like us: