உலகம்

சர்வதேச சட்டங்களை மதிக்காத எமிரேட்ஸ்

எமிரேட்ஸ் அரபுலகில் அதிக வெறுப்புக்கும் விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளது.

சட்டவிரோத சக்திகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் ஆதரவளிப்பதும்  பல அரபு நாடுகளில் மக்களது ஜனநாயக தெரிவுக்கு மாற்றமாக தன் செல்வாக்கை பயன்படுத்தில் அடக்குமுறைக்கும் அராஜகத்துக்கும் துணைபோவதுமே அதற்கு காரணம்.

இஸ்ரேலின் நெருங்கிய உறவுக்குரிய அரபு சக்தியாகவும் எமிரேட்ஸ் திகழ்கின்றது. லிபியாவில் இருக்கும் ஐ நா உட்பட சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்துக்கு எதிராக எமிரேட்ஸ் செயற்படுவது பட்டவர்த்தனம்.

கலீபா ஹப்தர் எனும் அமெரிக்க பிராஜாவுரிமை கொண்ட முன்னாள் இராணுவ அதிகாரிக்கு தேவையான சகல உதவிகளையும் செய்து சட்டபூர்வ அரசாங்கத்தை கலைக்க எமிரேட்ஸ் முழு மூச்சாக செயற்படுகின்றது. அண்மையில் எமிரேட்ஸ் வழங்கிய பல ஆயுதங்களும் இராணுவ வாகனங்களும் லிபிய அரச சார்பு படைகளிடம் அகப்பட்டிருந்தன.

அதுபோல நேற்றும் இந்த ட்ரோன்ஸ் விமானத்தை லிபிய படையினர் சுட்டு வீழ்த்தியபோது எமிரேட்ஸின் இந்த குற்றச் செயற்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

Please follow and like us: