உலகம்

மஸ்ஜிதுல் அக்ஸாவை அலங்கரித்த நாலு இலட்சம் தொழுகையாளிகள்

Image may contain: one or more people and crowd

 

நேற்றிரவு ரமழானின் 27 ஆம் இரவு இஃ திகாப்  – மஸ்ஜிதில் தரித்தல் அமலுக்காக பல்லாயிரக்கணக்கான பலஸ்தீன மக்கள் புனித மஸ்ஜிதுல் அக்சாவில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

சுமார் நான்கு இலட்சம் பேர் இரவுத் தொழுகை நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கானோரின் இந்த ஒன்றுகூடல் “தமது மஸ்ஜித் தீண்டப்படுவதை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை” என்ற செய்தியை ஆக்கிரமிப்பாளர்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறது.

குத்ஸை தாரைவார்க்க முனையும் அராபிய சியோனிஸ்ட்டுகளுக்கும் சிறந்த பதிலை இது வழங்கியுள்ளது. “நூற்றாண்டின் ஒப்பந்தம்” எனும் பலஸ்தீனை  இஸ்ரேலிடம் தாரைவார்க்கும் திட்டத்துக்கும் தீர்மானகரமான பதிலை பலஸ்தீன மக்கள் இதன் மூலம் சொல்லியிருக்கின்றார்கள்.

Please follow and like us: