இலங்கை

அபாயா தடை சுற்றறிக்கைக்கு எதிராக அடிப்படை உரிமை வழக்குத் தாக்கல் செய்ய மனுதாரர்கள் கோரல்

அரச அலுவலகங்களில் அபாயா அணிவதைத் தடை செய்து வெளியிடப்பட்டிருக்கும் சுற்றறிக்கைக்கு எதிராக அடிப்படை உரிமை வழக்குத் தாக்கம் செய்வதற்காக மனுதாரர்கள் கோரல்
———————————-

இன்று பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வெளியிடப்பட்ட 13/2019 இலக்கத்தைக் கொண்ட சுற்றறிக்கை அரச நிறுவனங்களில் அபாயா ஆடையை அணிந்து செல்வதற்கு தடை விதித்திருக்கிறது. குறிப்பிட்ட சுற்றறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைப் பிரயோகங்ளும் ஒரு சில பொருள் மயக்கங்ளைத் தோற்றுவிக்கின்றன.

இந்த ஒரு தலைப்பட்சமான சுற்றறிக்கை பாடசாலை முதல் வைத்தியசாலை வரை இலங்கையில் அரச சேவையில் பணிபுரியும் எந்த முஸ்லிம் பெண்களும் அபாயா அணிந்து அலுவலகங்களுக்குச் செல்ல முடியாத நிலையைத் தோற்றுவித்திருக்கிறது.இது இலங்கைப் பிரஜைகளின் அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலாகும்.

இந்த சுற்றறிக்கைக்கு எதிராக குரல்கள் இயக்கம் இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கினை மக்கள் மயப்படுத்தும் நோக்கில் இந்த சுற்றறிக்கையினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஹபாயா அணிந்து அரச அலுவலகங்களில் பணி புரியும் பெண்களை இவ்வழக்கிற்கான மனுதாரர்களாக வருமாறு குரல்கள் இயக்கம் வேண்டிக் கொள்கிறது.

இது மிகவும் அவசரமாக செயற்படுத்தப்பட வேண்டிய விடயமாக இருப்பதனால் அடிப்படை உரிமை வழக்கிற்கு மனு தாரர்களாக வர விரும்பும் ஹபாயா அணிந்து அரச அலுவலகங்களுக்குச் செல்லும் பெண்கள் பின்வரும் விபரங்களோடு 0094 76 648 4119 என்ற இலக்கத்திற்கு வட்ஸப் செய்யவும்.குரல்கள் இயக்கம் உங்களைத் தொடர்பு கொள்ளும்.

பெயர்:
தற்போதைய முகவரி:
பணி புரியும் அரச அலுவலகம்.

அதே வேளை இவ்வழக்கிற்காக எம்மோடு இணைந்து பணியாற்ற விரும்பும் சட்டத்தரணிகளையும் குரல்கள் இயக்கம் வரவேற்கிறது

No photo description available.

Please follow and like us: