இலங்கை

சட்டத்தின் கோரைப்பற்களுக்குள்ளே குருதி சிந்துகின்ற அப்பாவிகள்

ஆவென்று தனது டைனோசர் வாயைத் திறந்து கொண்டு வெறியோடு காத்துக் கொண்டிருக்கின்ற இந்த தேசத்தின் அவசர காலச் சட்த்தின் கீழ் வாள் வைத்திருந்தார் பால் வைத்திருந்தார் என்று தொடங்கி பள்ளி கட்டினார் பள்ளியறை கட்டினார் பயான் சீடி வைத்திருந்தார் கனினி வைத்திருந்தார் அதற்குள்ளே சீடி வைத்திருந்தார் லெப் டொப்பில் டொப் டென் மேட்டர்கள் வைத்திருந்தார் என்று சந்தேகத்தின் பேர் கொண்டு பல அப்பாவி முஸ்லீம்களை அன்றாடம் கைது செய்வது இப்போதைக்கு ட்ரென்டிங்கில் கரன்ட் ஷொக் ததந்து கொண்டிருக்கின்றது.

சந்தேகதத்தின் பேரில் கைது செய்வதனைக் கூட பரவாயில்லை என்று விட்டு விடலாம். பிரச்சினை என்னவென்றால் இவ்வாறு கைது செய்யப்படுகின்ற அப்பாவிகளை பொலிஸ் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரிப்பதற்காக நீதவான் நீதிமன்றத்திமிருந்து எழுபத்தியிரண்டு மணி நேர தடுப்புக்காவல் கட்டளையினை (Detention Order for 72 hours under Emergency regulation) பெறுகின்ற பொலிசார் எழுபத்தியிரண்டு மணி நேரம் அந்த கைதுக்காரர்களை தமது ஸ்டேஷனில் வைத்து விசாரிக்கின்றார்கள்.

எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு பொலிஸ் நியைலத்தில் வைத்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் வைத்து செய்து விசாரித்து விட்டு பின்னர் மூன்று நாள் முடிவில் அந்த முஸ்லீம் அப்பாவிகளுக்கெதிராக பீ அறிக்கையை (B Report or BR) தயார் செய்து அவர்களை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மேலதிக விசாரணைகளுக்காக இரு வாரங்களுக்கு அவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு கோருகின்றார்கள்.

இங்கு பிரச்சினை என்னவென்றால் இவ்வாறு பீ அறிக்கையின் மூலம் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்களை ஆஜர்படுத்துகின்ற போது பொலிசார் மிக சூட்சுமமாக எதேச்சதிகாரமாக அநியாயமாக ஜனநாயகத்துக்கு முற்றிலும் முரணாக அநியாயத்துக்கு எவ்வித சான்றுகளோ சாட்சியங்களோ இல்லாத நிலையில் தமது பீ அறிக்கையில் குறித்த சந்தேக நபர் 1979ம் ஆண்டின் 48ம் இலக்க பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (prevention of Terrorism Act) கீழும் அதே போல 2007ம் ஆண்டின் 56ம் இலக்க சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் சமவாயச் சட்டத்தின் (International Convention on Civil and political Rights) கீழும் தண்டிக்கப்படக் கூடிய குற்றங்களை புரிந்துள்ளார் என கண்ட மேனிக்கு அள்ளி விட்டே தமது பீ அறிக்கையை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்கின்றனர்.

இவ்வாறு இவர்கள் மேற்குறித்த இரண்டு சட்டங்களையும் தமது பீ அறிக்கையில் குறிப்பிடுவதன் காரணம் இந்த இரண்டு சட்டகளின் கீழும் குறித்த சந்தேக நபரை பிணையில் விடுவிப்பதற்கு நீதவான் நீதிமன்றுக்கு எவ்வித நியாயாதிக்கமும் அற்றுப் போய் விடுகின்றது. பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்ற எவரையும் சட்ட மா அதிபரின் சம்மதத்துடனன்றி இலங்கையின் எந்த நீதிமன்றத்துக்கும் எந்த சந்தேக நபரையும் பிணையில் விடுவிப்பதற்கு நியாயாதிக்கமில்லாத அதே நேரம் 2007ம் ஆண்டின் 56ம் இலக்க சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் சமவாயச் சட்டத்தின் கீழழ் பிணை வழங்குகின்ற நியாயாதிக்கம் மேனீதிமனறத்துக்கு மட்டுமே இருக்கின்றது.

எனவேதான் பொலிசார் அநியாயத்துக்கு எவ்வித சான்றுகளோ அல்லது சாட்சிகளோ இல்லாமல் தற்போதைய அவசர காலச்சட்டத்தினை பயன்படுத்தி கைது செய்யப்படுகின்ற அப்பாவி முஸ்லீம்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்கின்ற முதள் நாளே மேற் குறித்த இரண்டு திகிலூட்டகின்ற சட்டங்களின் கீழும் தண்டிக்கக் கூடிய குற்றங்களை புரிசந்துள்ளார்கள் என்று தமது பீ அறிக்கையில் குறிப்பிட்டு பிணை தொடர்பில் நீவதான் நீதிமன்றத்தின் கைகளை கட்டி விடுகின்றனர்.

இதன் காரணமாக குற்றங்கள் ஏதும் செய்யாமலே வெறுமனே சந்தேகம் என்ற பெயரில் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லீம்கள் மாதக்கணக்கில் விளக்க மறியலிலே இருக்க வேண்டுமென்பது விதியாகி விடுகின்றது.

அண்மையில் கப்பலின் சுக்கான் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்த முஸ்லீம் பெண்ணொருவர் பௌத்த தர்மச்சக்கரத்தை நிந்தனை செய்து விட்டார் என்ற போலியான குற்றச்சாட்டின் பேரில் செய்ய்படப்டு இப்போது வரை அவர் விளக்க மறயிலில் இருந்து வருகின்றார். அவருக்கெதிராக கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் சமவாயச் சட்டமாகும். இந்த சட்டத்தின் கீழ் பிணை கோரி செல்ல வேண்டியது மேனீதமின்றத்துக்கு மட்டுமே. மேனீதிமன்றத்தில் பிணை கோரி செய்யப்ப்டுகின்ற விண்ணப்பத்துக்கான நடபடிகள் ஏராளம். அதற்கு மிக நீண்ட காலம் விளக்க மறியலிலே இருக்க வேண்டி வரும்.

இப்படி நாட்டில் தற்போது இந்த அராஜகம் முஸ்லிம்களுக்கதிராக சென்று கொண்டிருக்க மறு புறம் முஸ்லீம்களுக்கெதிராக வன்முறைகளை தூண்டி விட்டு அந்த சமூகத்தின் உடமைகளையும் பொருளாதரத்தையும் ஓவர் நைட்டில் வேரோடழித்து வெற்றிப்பெருமிதம் கொண்ட கிரிமினல் ஓநாய்களும், இஸ்லாமிய வெறுப்பரசியலை வெளிப்படையாக செய்து அதன் மீது முஸ்லீம் சமூகத்தின் மீது சூர சம்ஹாரம் செய்து கொண்டிருக்கின்ற வல்லூறுகளும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு தற்போது அசால்ட்டாக பிணையில் வெளியே வந்த கெத்து காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

அதே நேரம் நல்லாட்சியின் அங்காளி பங்காளிகளாக இருக்கின்ற எமது சோனக வெட்கங் கெட்ட அரசியல் தலைமைத்துவங்கள் தம்மை நம்பியிருக்கின்ற சமூகத்தின் அவலங்களை காதில் வாங்கிக் கொண்டு அந்த அவல இசையில் பிரேக் டான்ஸ் ஆடியவாறு இன்னும் பாலுண்ணி போல அவர்களுடனே ஒட்டிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களுக்குத் தேவை அமைச்சுப் பதவிகளும் அது சார்ந்த லீலா கதாகலேட்சபங்களும்…

இந்த சமூகம் எக்கேடு கெட்டுப் போகட்டும்.

கிண்ணியா சபருள்ளாஹ்
2019-05-29

Please follow and like us: