உலகம்

பௌத்த பின்லாடனுக்கு பிடியாணை

அசின் விராது

மியன்மாரின் ரோஹிங்கிய சிறுபான்மை முஸ்லிம்களை வேட்டையாடிய  உலகில்  மனிதநேய உள்ளங்களின் வெறுப்புக்கும் கோபத்துக்கும் உள்ளான பாத்திரம்.

பௌத்த பின்லாடன் என்று அறியப்பட்டவர். 2013 இல் டைம் சஞ்சிகையின் முன்னட்டையில் “பௌத்த பயங்கரவாத்தின் முகம்” என்ற வாசகத்துடன் இடம்பிடித்தவர்.

அதனால் அன்று இலங்கையில் கூட டைம் சஞ்சிகையின் அந்த இதழ் தடை செய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் சிறையிலிருந்து அவருடன் நெருங்கிய உறவைப்பேணிய ஞானசார தேரர் வெளிவந்து அவரது பாணியில் இலங்கையில் மீண்டும் செயற்படும் வேளையில் அசின் விராதுவுக்கு  எதிராக மியன்மார் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அசின் விராது கைது செய்யப்பட்டால் மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

நேற்று மே 28 அன்று பிறப்பிக்கப்பட்ட பிடியாணை பற்றிய விபரங்களை கொழும்புகெசட்  இணையம் வெளியிட்டுள்ளது.

Arrest warrant issued for Myanmar firebrand monk Wirathu

 

Please follow and like us: