இலங்கை

இலங்கையில் இஸ்லாமோபோபியாவை எதிர்கொள்ளல்

 

இலங்கை சூழலில் இஸ்லாமிய எதிர்பை(Islamophobia) எதிர்கொள்வது எப்படி.?

இஸ்லாமிய எதிர்ப்பு என்பது இன்று மிகப் பெரிய நிறுவனமாகும் (Industry ).அதற்கென பல இலட்சம் ரூபாக்கள் செலவிடப்படுகின்றன.பலர் முழு நேர ஊழியர்களாக தொழிற்படுகின்றனர் .இந்த வகையில் இலங்கை சூழலில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமையை எதிர்கொள்வதற்கான சில ஆலோசனைகளை முன்வைக்கின்றேன்.

01.இஸ்லாமிய எதிர்ப்பின் மிகப் பெரிய இலக்கு நபியவர்களாகும் .முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேலாக நபியவர்களை நேசிப்பதை அவர்கள் நன்கு அறிவர் .எனவே எம்மை கோபப்படுத்துமாறு பல விடயங்களை எழுதுவர் ,பிரச்சாரம் செய்வர் .
இந்த இடத்தில் நாம் செய்ய வேண்டிய முக்கிய பணி எந்த மொழியில் எதிர்ப்பு அமைகிறதோ அந்த மொழியில் நபியவர்களின் வாழ்கை வரலாறு .அவரது வாழ்வில் அவர் எடுத்த முடிவுகளின் நியாயங்கள் …. Etc வெளியிட வேண்டும் ,கலந்துரையாடல்கள் ,ஊடக நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

02.அடுத்த முக்கிய அம்சம் இஸ்லாத்தை பயங்கரவாத்த்துடன் தொடர்புபடுத்தவர் .அதற்கென முஸ்லிம் சமூகத்தில் இருந்தே ஆட்களை தெரிவு செய்து ஆயுதங்களைக் கொடுத்து பல இடங்களில் பிரச்சினைகளை உருவாக்குவர் .இந்த இடத்தில் நாட்டின் பாதுகாப்பு தரப்பிற்கு தீவிரவாத சிந்தனை கொண்டோரை அடையாளப்படுத்திக் கொடுப்பது முஸ்லிம்களின் மார்க்க ரீதியான கடமையாகும் .அத்துடன் அவ்வாறான சிந்தனைகளின் உண்மையான பின்புலத்தை விளங்க வைப்பதற்கு சமூக மட்டத்தில் பாரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன் ஒரு நிகழ்வு நடந்து விட்டால் உண்மையான இஸ்லாத்தை முஸ்லிம் அல்லாத சமூகங்களிற்கு தெளிவுபடுத்த முயற்சிகள் செய்ய வேண்டும்.

03.அடுத்த முக்கிய அம்மசம் ஊடகங்கள் ,அனேக முஸ்லிம் அல்லாத ஊடகங்கள் இஸ்லாத்தையும்,முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்துமாறு தோடராக செய்திகளை வெளியிடும் .அவற்றை ஆவணப்படுத்தி உரிய இடங்களில் முறைப்பாடு செய்வதுடன் தேவையான சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் ஊடகப் பிரச்சாரத்திற்கு தெளிவான எதிப்பிரசாரத்தை முன்வைக்க வேண்டும்.

04.அடுத்த முக்கிய அம்சம் இனவாத்த்தை வளர்ப்பதாகும் .முதலில் நாம் இனவாதிகளிற்கு களம் அமைத்துக் கொடுக்குமாறு எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ளக் கூடாது .தற்போது நடப்பது போன்று அவர்களது நிகழ்வுகளிற்கு நாம் ஊடகப் பிரச்சாரத்தை வழங்கக் கூடாது .தேவையான இடங்களில் பாதுகாப்பு துறையிடம் தொடராக முறைப்பாடு செய்ய வேண்டும்.

05.இஸ்லாமிய எதிர்பின் அடுத்த முக்கிய அம்சம் அச்சுருத்துமாறு கடுமைஊ தொனியில் பேசுவர் .இந்த எந்த அச்சுருத்தளிற்கும் அஞ்சக் கூடாது அவற்றை அறிவு பூர்வமாக உரியவர்கள் ,உரிய முறையில் கையாள வேண்டும்.

06.அடுத்த முக்கிய அம்மசம் தேசிய ,கிராமிய மட்டங்களில் சர்வமத கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும். அவை நிறைய பிரச்சினைகளை தீர்க்க உதவும்.

07.அடுத்து சிலர் அனுசரனை பெற்று (Sponsor) இஸ்லாமிய எதிர்ப்பை மேற்கொள்வர் ,அவ்வாறு அனுசரணை வழங்கும் நிறுவனங்கள் ,வெளிநாட்டு அரசுகள் தொடர்பில் மக்களை அறிவூட்டுவதுன் .அவைகளை சட்டரீதியாக தடுக்க தடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

08.நாட்டில் உள்ள எல்லா வாசிகசாலைகளிற்கும் இஸ்லாம் தொடர்பான தெளிவுபடுத்தும் நூல்களை அன்பளிப்பு செய்ய வேண்டும் .இஸ்லாமிய எதிர்ப்பை எதிர்கொள்வதற்கு என தனியான சஞ்சிகை சிங்கள மொழியில் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

09.இஸ்லாமிய எதிர்பின் தற்போதைய மிகப்பெரிய தளம் சமூக ஊடகங்களாகும் .அவர்கள் முஸ்லிம்களை தூண்டுமாறு பதிவுகளை இடுவர் (உதாரணமாக புனித கஃபா மீது பன்றியை வைத்து படங்களை பதிவேற்றம் செய்தல்) இந்த இடங்களில் நாம் பின்னூட்டல்களை(Comments) வழங்க முற்படக் கூடாது .மாறாக அவற்றை முதலில் கானும் ஒவ்வொருவரும் Report பண்ன வேண்டும். பாதுகாப்பு தரப்பிடமும் தொடராக பல இடங்களில் முறைப்பாடு செய்ய வேண்டும். அவர்கள் முழு நேர ஊழியர்களை வைத்து வேலை செய்வது போன்று நாமும் முழு நேர ஊழியர்களை வைத்து அவற்றை எதிர்கொள்ள வேண்டும்.

10.தேர்தல் காலங்களில் இஸ்லாமிய எதிர்ப்பு பன்மடங்கு அதிகரிக்கும் இவ்வாறான காலங்களில் ,முஸ்லிம் அரசியல் தலைமைகள் .மிகவும் பொறுப்புடன் கவனமாக கருத்துக்களை வெளியிட வேண்டும். ஏனெனில் சிலரது அரசியேலே இஸ்லாமிய எதிர்ப்பாகும் .அத்துடன் அரசியல் நிலைப்பாடுகளும் கவனமாக எடுக் கப்பட வேண்டும்.

11.ஊடகங்கள் ,அல்லது அரசியல் தலைவர்கள் அல்லது மதகுருக்கள் இஸ்லாமிய எதிர்பை வெளியினும் போது உரிய தரிப்பிற்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்.

12.கிராமிய மட்டங்களில் இஸ்லாமிய எதிரப்பை ஜனநாயகரீதியாக ,சட்டரீதியாக எதிர்கொள்வதற்கு உரிய ஒழுங்குளை செய்து கொள்ள வேண்டும்.

13.இஸ்லாமிய எதிர்பை நீதமாக எதிர்க்கும் முஸ்லிம் அல்லாத எழுத்தாளர்கள் ,அரசியல் சமூகத்தலைமைகளிற்கு எப்போதும் நன்றி செலுத்த வேண்டும்.

14.இஸ்லாத்தின் மீதும் ,முஸ்லிம்கள் மீதும் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் நேர்மையாக தொழிற்பட வேண்டும் .முஸ்லிம் என்பதற்காக ஒரு பிழையான விடயத்தை நியாயப்படுத்த முற்படக்கூடாது.

எம் .என் முஹம்மத் -ஆசிரிய ஆலோசகர்.

( M.n. Mohamed முகநூல் பக்கத்தில் இருந்து )
Please follow and like us: