உலகம்

அறிஞர்கள் மூவரை கொலை செய்ய சவூதி அரசு திட்டம்

உலக முஸ்லிம்களின் தலைமை நாடாக நோக்கப்பட்ட சவூதி அரேபியா அண்மைக்காலத்தில் பெரும் அரசியல் மாற்றத்தை கண்டது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நலனுக்காக எதையும் செய்ய தயாரான நிலைக்கு இன்று அது தள்ளப்பட்டுள்ளது. பலஸ்தீன பிரச்சினையை புறம்தள்ளவும் குத்ஸ் நகரை சியோனிஸத்துக்கு தாரைவார்க்கவும் கூட அது தயாராகி விட்டது. இதற்கெல்லாம் பின்னணியாக பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் இருப்பது அனைவரும் அறிந்த உண்மை.

கடந்த காலங்களில் அவரால் பல நூற்றுக்கணக்கான சவூதி அறிஞர்கள் போலியான பயங்கரவாத குற்றச்சாட்டில் அல்லது எந்த குற்றச்சாட்டுமே இல்லாமல் சிறைக்குள் தள்ளப்பட்டனர். அவர்களுள் ஷெய்க் சல்மானுல் அவ்தா, ஷெய்க் அவழ் அல்கர்னி, கலாநிதி அலி அல் உமரி ஆகியோருக்கு போலிக் குற்றச்சாட்டுகளின் பேரில் மரண தண்டனை அளிக்க தீர்மானிக்கப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ரமழான் மாதம் முடிய அவர்களுக்கான மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக மிடில் ஈஸ்ட் தெரிவிக்கின்றது. அவரது உறவினர்களும் இதே செய்தியை தெரிவித்துள்ளனர்.

இது சவூதி அரசு வேண்டுமென்று வதந்தியாக பரப்பி விட்டுள்ள செய்தியென்றும் சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவர்கள் மூவரும் பெரும் சமூக அந்தஸ்து பெற்ற ஆளுமைகளாக இருப்பதால் மக்களின் எதிர்வினை குறித்த நாடிப்பிடிப்புக்காக இப்படியொரு செய்தியை பரப்புவதாக அவர்கள் கூறுகின்றனர்.

இறைதூதருக்காக நுஸ்ரத்துள் ரசூல் என்ற செயற்பாட்டை குவைத்தில் மேற்கொண்டார் என்ற அதிசயமான குற்றச்சாட்டு ஷெய்க் சல்மானுல் அவ்தாவுக்கு இருக்கின்றது. அடுத்த இருவரும் பலஸ்தீனுக்காக குரல் கொடுத்த பாவத்தை செய்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களது சிறைதண்டனைக்கு மேலாக பாரிய மனித உரிமைமீறல்களையும் இவர்கள் முகம்கொடுக்கின்றனர் என்பதை எந்த சவூதி சார்பு ஊடகங்களோ அழைப்பாளர்களோ வெளிக்காட்டுவதில்லை.

கலாநிதி அலி அல் உமரி காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைகளுக்கு உள்ளானார். சூடுவைத்தல் , மின்சார ஷாக் வழங்கல் போன்றவை அதில் குறிப்பிடத்தக்கன.

எல்லாவற்றுக்கும் மேலாக இவர்களுக்கு இருக்கும் மக்கள் ஆதரவு அடக்குமுறையாளர்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது தான் உண்மை.

Please follow and like us: