விளையாட்டு

கிரிக்கட் : இலங்கை அணியின் இந்த வருட முதல்வெற்றி

இலங்கை தேசிய கிரிக்கட் அணி மே 21இல் நடந்த இருதரப்பு போட்டியில் ஸ்கொட்லாந்து அணியை வெற்றி கொண்டுள்ளது.
முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கட்டிகளுக்கு 322 ஓட்டங்களை பெற்ற போதும் காலநிலை காரணமாக ஸ்கொட்லாந்து அணிக்கு 34 ஓவர்களில் 235 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் ஸ்கொட்லாந்து அணி 199 ஒடடங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
ஏற்கனவே மழை காரணமாக முதலாவது ஆட்டம் நடைபெறவில்லை என்பதால் இலங்கை அணி 1-0 என்றவகையில் தொடரை வெற்றி கொண்டது.

இது இலங்கை அணியின் இந்த வருடத்துக்கான முதல் வெற்றியாகும். இவ்வருடத்தில் 9 போட்டிகளில் இலங்கை அணி பங்கு பற்றி பிரகாசிக்க தவறியமை குறிப்பிடத்தக்கது.

அதிலும் சுமார் 3 வருடங்களில் இலங்கை இருதரப்பு போட்டிகளில் பெரும் முதல் வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது .

உலக கோப்பை இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை அணியின் இந்த வெற்றி ரசிகர்களுக்கு சிறு உத்வேகத்தை கொடுத்துள்ளது.

அரசியலாலும் ஊழல் மாபியாக்களாலும் ஆளப்படும் கிரிக்கட் நிர்வாகம் காரணமாக கடந்த காலங்களில் இலங்கை கிரிக்கட் மிகுந்த சீரழிவை சந்தித்திருந்தது. இன்னும் அதிலிருந்து மீளாத நிலையில் உலக கிண்ண போட்டிகளுக்கு முகம் கொடுக்கின்றது என்பது வருத்தமளிக்கும் நிலைமையாக உள்ளது.

Please follow and like us: