இலங்கை

மாதம்பையில் சுமுகமான நிலைமை

மாதம்பை பகுதியில் ஏற்பட்ட சிறு பதற்ற நிலை சுமுகமான நிலைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் இளைஞர் ஒருவருக்கும் சிங்கள நபர் ஒருவருக்குமிடையில் ஏற்பட்ட சிறு முரண்பாட்டில் முஸ்லிம் இளைஞரால் தாக்கப்பட்ட குறித்த சிங்கள நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மாதம்பை பகுதியில் நேற்று இரவு சிறு பதற்ற நிலை காணப்பட்டது.

இதனையடுத்து குறித்த பிரதேசத்திற்கு பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன் தற்போது நிலைமை சுமுகமான நிலைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தாக்கப்பட்ட நபருக்கு பாரிய காயங்கள் எதுவும் இல்லை எனவும் குறித்த நபர் மாதம்பை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் இன்று காலை வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பகுதியில் சுமுகமான நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாகவும் எவ்வாறாயினும் பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us: