இலங்கை

முஸ்லிம்கள் மீதான சிங்கள இனவெறி தாக்குதலைக் கண்டித்து சென்ணையில் இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்

இலங்கையில் முஸ்லிம்கள் மீதான சிங்கள இனவெறி தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாட்டு நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் இன்று 17-03-2018 சனிக்கிழமை, காலை 10 மணியளவில் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு நடைபெற்றது.

இப்போராட்டத்தில் தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் விடுதலை இயக்கம், தமிழர் நலப் பேரியக்கம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகள் மற்றும் இயக்கங்கள் பங்கேற்றன..

தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் அ.வினோத், தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் மு.களஞ்சியம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கண்டன முழக்கமிட்டனர்.

Please follow and like us:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*