இலங்கை

நல்லாட்சியும் நாசமாய்போன 400 காடையர்களும்

   2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி இலங்கைவாழ் முஸ்லிம்கள் மகிழ்ச்சியின் உச்சத்தை தொட்டனர்.ஆம்,இனவெறியாட்டத்துக்கு அடித்தளமிட்ட மகிந்த அரசாங்கத்தை தோற்கடித்து விட்டோம் என்ற மகிழ்ச்சியே அது.
முஸ்லிம் சிறுவர்கள் முதல் பொக்கைவாய் பாட்டி வரை சந்தோசப்பட்டதன் காரணமே இனவாதம் ஒழிந்து விட்டது என்பதுதான்.இலங்கைவாழ் முஸ்லிம்கள் இந்த அரசிடம் பெரிதாக எதையும் விரும்பி கேட்கவில்லை.இவர்கள் கேட்டுநின்றதெல்லாம் அடிப்படை உரிமையான சுதந்திரத்தை மாத்திரமே..!
“இளவு காத்த கிளி போல” முஸ்லிம்கள் காத்திருந்த சுதந்திரம் நல்லாட்சி (மைத்திரி-ரணில்) ஆட்சியிலும் தொலைந்து போனது.

கிந்தோட்டை,அம்பாறை,திகன,கண்டி,அக்குறனை என பட்டியல் நீண்டு செல்கிறது.நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற இனவெறி தாக்குதலானது,இரத்த வெறிபிடித்த பெளத்த காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான தாக்குதலாகும்.கண்டி நிருவாக மாவட்டத்தில் நடைபெற்ற கொடுரமான இனவெறி தாக்குதலுக்கு பிரதமரும், ஜனாதிபதியும் துணை நின்றார்களா …? எனும் கேள்வியை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.கலவரம் நடைபெற போவதை உணர்ந்தும்,முஸ்லிம் தலைவர்களின் கோரிக்கைக்கினங்கவும் வேடிக்கைபார்க்க பாதுகாப்பு படையினரை அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கிருந்தவர்கள் பாதுகாப்பு படையினரா அல்லது பாதுகாப்பு படையினரைப் போன்று செய்து வைத்த பொம்மையா..? என சிந்திக்க தூண்டுகிறது.கலவரம் உச்ச நிலையை தொட்டவுடன் திடீரென அவசரகால சட்டம்,ஊரடங்கு சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.ஆனாலும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னர் 10க்கும் அதிகமான பள்ளிவாயல்கள்,60க்கும் அதிகமான கடைகள் வீடுகள் என அத்தனையும் தாக்கப்பட்டன.ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது யாரும் வெளியேற வேண்டாம் என முஸ்லிம்களுக்கு எச்சரித்து விட்டு சிங்கள காடையர்களுக்கு இலகுவாக தாக்க வழிசமைத்து கொடுத்தது பாதுகாப்புப் படை.
சம்பவ இடத்தில் வேடிக்கை பார்த்த பாதுகாப்பு படையினரை இனங்கண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா..??
இரகசிய கெமராக்களில் சிக்கிய கொள்ளைகாரர்கள் இனவெறியர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுமா..?நொந்து சின்னாபின்னமாகிப் போன முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்குமா..?
தயவு செய்து குடியியல்,குற்றவியல் சட்டங்களை பெளத்த,இந்து,முஸ்லிம் சட்டங்கள் என பெயர் மாற்றிட வேண்டாம்.

By-Ansaf kabeer

Please follow and like us: