இலங்கை

இன்னுமொரு இனவாத தாக்குதலுக்கு தூபமிடும் மவ்பிம பத்திரிகை
இலங்கை

இன்னுமொரு இனவாத தாக்குதலுக்கு தூபமிடும் மவ்பிம பத்திரிகை

  வைத்தியர் ஷாபி தொடர்பாக  ஏற்கனவே  அடிப்படையற்ற செய்திகளை சிங்கள இனவாத பத்திரிகையான திவயின பிரசுரித்தமை யும்  அதைத்தொடர்ந்து  அவர் கைது செய்யப்பட்டு  அநியாயமான முறையில் சட்டத்துக்கு முரணாக  சிறைவாசம் அனுபவிப்பதும் அனைவரும் அறிந்த விடயம். இப்பொழுது மவ்பிம பத்திரிக்கை அதே பாணியில் வைத்தியர் ஷாபி மீது அர்த்தமற்ற அதே நேரம் பகுத்தறிவுக்கு பொருந்தாத வட்டிலப்பம் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. இனவாத தாண்டவமாடும் இந்த ஊடகங்களுக்கு  சட்டத்தின் வழியில் கடிவாளமிடுவது எப்போது என்று […]

முஸ்லிம் ஆளுநர்களை தொடர்ந்து அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களும் இராஜினாமா
இலங்கை

முஸ்லிம் ஆளுநர்களை தொடர்ந்து அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களும் இராஜினாமா

அரசாங்கத்தில் பதவி வகித்த அமைச்சரவை அந்தஸ்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். முஸ்லிம் அரசியல் தலைமைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (03) அலரி மாளிகையில் நடைபெற்றபோது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த அறிவிப்பை உத்தியோகபூர்வமாக வெளியிட்டார். Please follow and like us:

முஸ்லிம் அரசியல்வாதிகள் மூவரும் இராஜினாமா செய்யக்கூடாது
இலங்கை

முஸ்லிம் அரசியல்வாதிகள் மூவரும் இராஜினாமா செய்யக்கூடாது

ஆளுனர்கள் ஹிஸ்புல்லாஹ், ஆஸாத் ஸாலி மற்றும் அமைச்சர் றிஷாத் தாமாக இராஜினாமா செய்ய வேண்டியதில்லை. இந்த நாட்டில் ஒரு அரசு இருக்கிறது, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படைகள் இருக்கின்றன. பொளத்த தர்மத்தைப் பாதுகாக்க உத்தியோக பூர்வமான நான்கு மதகுருபீடங்கள் இருக்கின்றன. சிங்கள இனத்தைப் பாதுகாக்க 70% மக்களும் புத்திஜீவிகளும் இருக்கின்றார்கள். அரசியல் உள்நோக்கங்களுடன் அரசியல்வாதி பிக்கு ஒருவரும், அரசியல் அதிகார பொதுமன்னிப்பு பெற்று சிறைமீண்ட பிக்கு […]

அபாயா தடை சுற்றறிக்கைக்கு எதிராக அடிப்படை உரிமை வழக்குத் தாக்கல் செய்ய மனுதாரர்கள் கோரல்
இலங்கை

அபாயா தடை சுற்றறிக்கைக்கு எதிராக அடிப்படை உரிமை வழக்குத் தாக்கல் செய்ய மனுதாரர்கள் கோரல்

அரச அலுவலகங்களில் அபாயா அணிவதைத் தடை செய்து வெளியிடப்பட்டிருக்கும் சுற்றறிக்கைக்கு எதிராக அடிப்படை உரிமை வழக்குத் தாக்கம் செய்வதற்காக மனுதாரர்கள் கோரல் ———————————- இன்று பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வெளியிடப்பட்ட 13/2019 இலக்கத்தைக் கொண்ட சுற்றறிக்கை அரச நிறுவனங்களில் அபாயா ஆடையை அணிந்து செல்வதற்கு தடை விதித்திருக்கிறது. குறிப்பிட்ட சுற்றறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைப் பிரயோகங்ளும் ஒரு சில பொருள் மயக்கங்ளைத் தோற்றுவிக்கின்றன. இந்த ஒரு தலைப்பட்சமான […]

வைத்தியர் ஷாபி விவகாரம்: கிணறு வெட்ட பூதம் வெளியான கதையாய் அந்நிய வைத்தியர்களுக்கு நடுக்கம்
இலங்கை

வைத்தியர் ஷாபி விவகாரம்: கிணறு வெட்ட பூதம் வெளியான கதையாய் அந்நிய வைத்தியர்களுக்கு நடுக்கம்

  வைத்தியர் ஷாபி இன்று VOG level க்கு சித்தரிக்கப்பட்டு குற்றம் சாட்டப்படுகிறார். உண்மையில் மருத்ததுவ துறையில் வைத்தியர் ஷாபியின் நிலை என்ன? இவர் ஒரு MBBS தரத்தில் உள்ள சாதாரண வைத்தியர். குருநாகலை வைத்தியசாலையை பொறுத்தவரை ஒரு VOG க்கு கீழ் 4 வைத்தியர்கள் கடமை புரிவர். இவர்களை SHO (Senior House Officer) என்று அழைப்பர். இந்த நால்வரில் ஒருவர்தான் இந்த ஷாபி. இவர்களுக்கு மேலதிகமாக Intern […]

சட்டத்தின் கோரைப்பற்களுக்குள்ளே குருதி சிந்துகின்ற அப்பாவிகள்
இலங்கை

சட்டத்தின் கோரைப்பற்களுக்குள்ளே குருதி சிந்துகின்ற அப்பாவிகள்

ஆவென்று தனது டைனோசர் வாயைத் திறந்து கொண்டு வெறியோடு காத்துக் கொண்டிருக்கின்ற இந்த தேசத்தின் அவசர காலச் சட்த்தின் கீழ் வாள் வைத்திருந்தார் பால் வைத்திருந்தார் என்று தொடங்கி பள்ளி கட்டினார் பள்ளியறை கட்டினார் பயான் சீடி வைத்திருந்தார் கனினி வைத்திருந்தார் அதற்குள்ளே சீடி வைத்திருந்தார் லெப் டொப்பில் டொப் டென் மேட்டர்கள் வைத்திருந்தார் என்று சந்தேகத்தின் பேர் கொண்டு பல அப்பாவி முஸ்லீம்களை அன்றாடம் கைது செய்வது இப்போதைக்கு […]

சிறைகளில் உரிமை மீறல்களுக்கு உள்ளாகும் முஸ்லிம் கைதிகள்
இலங்கை

சிறைகளில் உரிமை மீறல்களுக்கு உள்ளாகும் முஸ்லிம் கைதிகள்

அண்மைய நிகழ்வுகளின் பின்னணியில் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் அப்பாவி முஸ்லிம்களுக்கு சிறைகளில் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.  அடிப்படை வசதிகளற்ற இடங்களில் பலர் குவிக்கப்படுவதும் அவர்கள் மீது தாக்குதல்கள் போன்ற மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதும் பொறுப்புதாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இனவாத ரீதியான பழிவாங்கல்கள் சாதாரணமாக சிறைகளில் இடம்பெறுவதும் தொழுகை போன்ற கடமைகளை நிறைவேற்ற மறுக்கப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளை பெறுவதற்கு கூட இலஞ்சம் கோரப்படுவதும்  […]

இஸ்லாத்துக்கெதிரான வீடியோ மூலம் அரசியல் இலாபம் தேடும் நடிகன்
இலங்கை

இஸ்லாத்துக்கெதிரான வீடியோ மூலம் அரசியல் இலாபம் தேடும் நடிகன்

அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க  தனது முகநூலில் முஸ்லிம்களின் உணர்வுகளை சீண்டும் விதமான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இஸ்லாத்துக்கெதிராக , இறைதூதருக்கெதிராக  தஸ்லிமா நஸ்ரின் அல்லது அவரைப்போன்ற ஒரு பெண் பேசுகின்ற வெறுப்பை தூண்டும் பதிவு தான் அது. சிங்களத்தில் சப் டைட்டில் அழகாக இணைக்கப்பட்டுள்ளது. அவர் பேசும் விடயங்கள் எல்லாம் இதற்கு முன் எத்தனையோ இஸ்லாம் விரோதிகளால் பேசப்பட்ட ஒரேவகை பொய்க்குற்றச்சாட்டுக்களே. ஏற்கனவே பலர் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்திருப்பினும் […]

இலங்கையில் இஸ்லாமோபோபியாவை எதிர்கொள்ளல்
இலங்கை

இலங்கையில் இஸ்லாமோபோபியாவை எதிர்கொள்ளல்

  இலங்கை சூழலில் இஸ்லாமிய எதிர்பை(Islamophobia) எதிர்கொள்வது எப்படி.? இஸ்லாமிய எதிர்ப்பு என்பது இன்று மிகப் பெரிய நிறுவனமாகும் (Industry ).அதற்கென பல இலட்சம் ரூபாக்கள் செலவிடப்படுகின்றன.பலர் முழு நேர ஊழியர்களாக தொழிற்படுகின்றனர் .இந்த வகையில் இலங்கை சூழலில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமையை எதிர்கொள்வதற்கான சில ஆலோசனைகளை முன்வைக்கின்றேன். 01.இஸ்லாமிய எதிர்ப்பின் மிகப் பெரிய இலக்கு நபியவர்களாகும் .முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேலாக நபியவர்களை நேசிப்பதை அவர்கள் நன்கு […]

ICCPR இனை அமுல்படுத்த கோரும் இலங்கை செயற்பாட்டாளர்கள்
இலங்கை

ICCPR இனை அமுல்படுத்த கோரும் இலங்கை செயற்பாட்டாளர்கள்

அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை “அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (International Covenant on Civil and Political Rights) என்பது, 1966 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பல தரப்பு ஒப்பந்தம் ஆகும். இது 1976 மார்ச் 23 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தம் இதன் பங்காளர்கள் தனியாட்களுடைய […]